இன்று நாடு முழுவதும் 74வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது… இந்த நிலையில் Paytm குடியரசு தின சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது, Zomatoவில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் Paytm UPI மூலம் பணம் செலுத்தினால் ரூ.100 வரை கேஷ்பேக் பெறலாம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான உணவை Zomatoவில் ஆர்டர் செய்யும் போது, அதற்கு Paytm UPI ஐப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் சிறப்பு சலுகையை பெற முடியும்.. இதனால் நேரம் மற்றும் பணம் இரண்டையும் மிச்சப்படுத்தலாம். இந்த குடியரசு தினச் சலுகையைப் பெற, பயனர்கள் குறைந்தபட்சமாக ரூ.159க்கு ஆர்டர் செய்ய வேண்டும்.. இந்த சலுகை ஒரு பயனருக்கு மூன்று முறை செல்லுபடியாகும்.

Paytm செயலியில் UPI ஐப் பயன்படுத்தி பயனர்கள் வங்கியிலிருந்து வங்கிக்கு நேரடிப் பரிமாற்றங்களை முற்றிலும் பாதுகாப்பான முறையில் செய்யலாம். Paytm பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட UPI ஐடியுடன் கூடிய எந்தவொரு மொபைல் எண்ணுக்கும் உடனடியாகப் பணம் பெறலாம் மற்றும் அனுப்பலாம் என்று அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
Paytm குடியரசு தினச் சலுகையைப் பெறுவது எப்படி:
- Zomato செயலியில் விண்ணப்பிக்கும் கூப்பன் பிரிவில் PAYTMREPUBLIC விளம்பரக் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்
- Paytm UPI ஐப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள்
- பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக கேஷ்பேக்கைப் பெறுவார்கள்