fbpx

ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவு….! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் நிறைவடைந்து இருப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறி இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. உடனடியாக விபத்து நடைபெற்ற பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக ரயில்வே நிர்வாகம் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மீட்பு பணி மற்றும் சீரமைப்பு பணிகளில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே சென்னைக்கு வருகை தந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 238 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்று முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் 900 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

காயம் அடைந்தவர்கள் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தமிழக பயணிகளை சென்னை அழைத்து வருவதற்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் புவனேஸ்வரம் செல்கிறது. ரயில் விபத்தில் உயிர் தப்பிய 250 பேர் சென்னை சிறப்பு ரயில் மூலமாக தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

ஒடிசா ரயில் விபத்து..…! நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிடுகிறார் பிரதமர் நரேந்திரமோடி…..!

Sat Jun 3 , 2023
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே உள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7:20 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது. பெங்களூரு ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கொரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் மோதி விபத்தில் சிக்கியது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த அவர்களின் எண்ணிக்கை தற்போது […]
’ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’...!! பிரதமர் மோடியின் புதிய திட்டம்..!!

You May Like