உதடு பெரிதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் நல்ல பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டி அவர்களின் மகள் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “மசாலா படம்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவருக்கு, “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் தான் “புஷ்பா” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படம் இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்த நிலையில், தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார். தற்போது சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, சினிமா சின்னத்திரை என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வரும் நிலையில், அவ்வப்போது விமர்சனங்களையம் சந்தித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே சமயம் இந்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் ரேஷ்மாவிடம் அவருடைய உதடு பெரிதாக இருக்க காரணம் என்ன என்று சர்ச்சையான ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது, “அது என்னுடைய உதடு, அதை பெரிதாக்கிகொள்வதும், சிறிதாக்கிக்கொள்வதும் எனது விருப்பம், ஆப்ரேஷன் செய்து தான் அதை எப்படி மாற்றிக் கொண்டேன், அதனால் உங்களுக்கு என்ன”? இதற்காக உங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கும் ரேஷ்மாவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு! – 2ஆவது இடத்திற்கு செல்லுமா சன்ரைசர்ஸ்?