சென்னையில் கால்நடைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் செல்லப்பிராணி உரிமங்களை அதிகரிக்க வீடு வீடாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை மதுரையை சேர்ந்த புகழேந்தி என்பவர் வளர்த்த, தடை செய்யப்பட்ட இரண்டு நாய்கள் கடிதத்தில் தலை மற்றும் தொடை பகுதியில் பயங்கர காயம் ஏற்பட்டது. ஆயிரம் விளக்கு அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைக்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து செல்லப்பிராணி உரிமங்களை அதிகரிக்க வீடு வீடாக ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ராட்வீலர் நாய் கடித்த சம்பவத்திற்கு பிறகு இதுவரை, 1,500-க்கும் மேற்பட்ட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆன்லைன் போர்ட்டல் மூலம் 100 பதிவுகள் செய்யப்பட்டன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிகளின்படி, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விலங்குகள் அக்கம்பக்கத்தினருக்கு தொல்லை தரக்கூடாது, மேலும் கால்நடைகளுக்கு ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போடப்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போடாத நாய்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி கிடையாது. ஒரு நபர், ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும். பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. இந்த வழிகாட்டுதல்களை பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .