ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படையில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படையில் பணியாற்றலாம் . அதற்கு பிறகு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பணியில் நீட்டிக்கப்படுவர். மற்றவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும். தற்போது, அப்படி ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் திருத்தும் கொண்டுவந்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படையான பிஎஸ்எஃப் வீர்கள் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்யும் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு பெற்ற அக்னி வீரர்கள் எல்லை பாதுகாப்பு படையில் சேரும்போது அவர்களுக்கு வயது வரம்பு மற்றும் 10 சதவீத இடஒதுக்கீடு ஆகிய சலுகைகள் வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.