fbpx

பணியில் இருந்து விலகிய ஊழியர்கள்..!! ஆவின் நிறுவனத்தின் சில தயாரிப்புகள் நிறுத்தம்..? அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஆவின் நிறுவனத்தில் சில தயாரிப்புகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நாளுக்கு நாள் ஆவினில் புது புது விவகாரங்கள் வெடித்து வருகின்றன. ஏற்கனவே, அமுல் நிறுவனம் தமிழகத்துக்குள் நுழைய முயற்சித்து வருகிறது.. அமுல் என்பது, குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.. அதாவது, பால் உற்பத்தி விவசாயிகளிடம் இருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்ய, அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தமிழகத்துக்குள் அமுல் வந்துவிட்டால், ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்படும்.

ஏற்கனவே ஆவின் பால் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வரும் நிலையில், அமுலின் வருகையானது, கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால், அமுல் வந்தாலும் ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் உறுதி தந்து வருகிறார். இதற்கு நடுவில் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

”பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம்.. ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது.. அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் தந்தாலும், பற்றாக்குறையும், தட்டுப்பாடும், தொடர்ந்து நீடித்தே வருகிறது.

மற்றொருபுறம், அம்பத்தூர் ஆவினில் சிறுவர்களை வேலைக்கு வைத்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.. இதுபோதாதென்று, சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில்தான், பாலாடை கட்டி உற்பத்தியை நிறுத்த போவதாக ஆவின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆவினில் ‘சீஸ்’ எனப்படும் பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், பாசந்தி போன்றவை கடந்த 2022 ஆகஸ்ட் 19ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன… சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் இவற்றை தயாரிப்பதற்கு அனுபவம் பெற்ற ஒப்பந்த ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், இப்போது, ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருந்து விலகி விட்டனர். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாததால் இந்த பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு உள்ளதாம். இந்த பொருட்களின் தயாரிப்பையும் முற்றிலும் நிறுத்த ஆவின் முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. ஆனால், இதுகுறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஆவின் இதுகுறித்து விளக்கம் தருமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் தரப்பில் எழுந்து வருகிறது.

Chella

Next Post

இரவு 10 மணிக்கு திடீரென நுழைந்த கணவன்..!! பதறிய மனைவி, தாய்மாமா..!! துணியில்லாமல்..!! அடச்சீ...!! அடித்தே கொலை..!!

Mon Jun 12 , 2023
தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த சொந்த மாமாவை மருமகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள டவுடா காவல் நிலையப் பகுதியில் கஜூரியாவில் வசிக்கும் 45 வயதான சங்கர், பகோரா கிராமத்திலேயே கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் அவரது மருமகன் பிரகாஷ் பகோராவின் (30) வீடு உள்ளது. பிரகாஷ் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பிரகாஷின் மனைவி […]
இரவு 10 மணிக்கு திடீரென நுழைந்த கணவன்..!! பதறிய மனைவி, தாய்மாமா..!! துணியில்லாமல்..!! அடச்சீ...!! அடித்தே கொலை..!!

You May Like