fbpx

மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு!… மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாட்டில் 15-29 வயது உட்பட்டோருக்கான “மேரா யுவா பாரத்” (My Bharat) எனும் புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.  மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர், இளைஞர் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், தன்னாட்சி நிறுவனமான மேரா யுவ பாரதத்தை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாட்டில் உள்ள 40 கோடி இளையோர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இது இளைஞர்களின் கனவுகளை நனவாக்க சமமான அணுகலை வழங்க முயற்சிக்கிறது. இளைஞர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படும் வகையில் புதிய தளம் அமையும் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, மருத்துவர்களின் ஓய்வு வயதை 62 லிருந்து 65 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவர்கள் 65 வயதிற்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்றுள்ளனர். மேலும், மருத்துவர்களுக்கான ஓய்வு வயது 65 ஆக உயர்த்தியது மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

’ஏலே இப்படி பண்றீங்க’..? ’அப்படியெல்லாம் செய்யாதீங்க’..!! ரசிகர்களை நெகிழ வைத்த விராட் கோலி..!!

Thu Oct 12 , 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடப் போகிறது என தெரிந்ததுமே ரசிகர்கள் நவீன் உல் ஹக்கும், விராட் கோலியும் 6 மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில், நேற்று மைதானத்திற்கு நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்ததிலிருந்து ரசிகர்கள் கோலி! கோலி! என கத்தி வெறுப்பேற்றினர். ஆனால், இதனை நவீன் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, நவீன் உல் […]

You May Like