fbpx

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு..!! டேவிட் வார்னர் அறிவிப்பு..!!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் உதை வாங்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு சுக்கு நூறாக உடைந்தது. இந்நிலையில் தான், அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியா 18995 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 49 சதம் அடங்கும். ஆஸ்திரேலிய அணி 2 ஒருநாள் உலகக் கோப்பைகள் வென்ற அணியில் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார். மேலும், ஒரு டி20 உலகக் கோப்பை அணியிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வார்னர் இருந்தார்.

Read More : அச்சுறுத்தும் டெங்கு..!! அச்சத்தில் மக்கள்..!! கிடுகிடுவென உயரும் எண்ணிக்கை..!! பாதுகாப்பா இருங்க..!!

English Summary

Australian opener David Warner has announced his retirement from international cricket.

Chella

Next Post

30 வருஷம் ஆச்சு.. இப்போ நினைத்தாலும் கை, கால் நடுக்கம் வந்துவிடும்!! - நடிகர் செந்தில் எமோஷனல் டாக்

Tue Jun 25 , 2024
Actor Senthil was a comedy giant in Tamil cinema in the 80s and 90s. Many of the films he acted in with Goundamani have become super hits among the fans.

You May Like