fbpx

மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..! மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி ஊக்கத்தொகை பெறலாம்…!

புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தை மருந்தியல் துறை அறிவித்துள்ளது

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துகள் துறை புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. மருந்துத் தொழில்துறையின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும், உலகளாவிய தரநிலைகளை உறுதி செய்யவும் அரசு மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் 28.12.2023 அன்று வெளியிடப்பட்ட மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதியின் திருத்தப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் திருத்தப்பட்ட திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

திருத்தப்பட்ட திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

விரிவுபடுத்தப்பட்ட தகுதி வரம்பு: அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது உயர்தர உற்பத்தித் தரத்தை அடைவதில் சிறிய நிறுவனங்ளை ஊக்குவிக்கிறது.

ஊக்கத் தொகை முறை:கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு சராசரி விற்றுமுதல் கொண்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை ஊக்கத்தொகை பெறத் தகுதி.

Vignesh

Next Post

Tn Govt தூள் அறிவிப்பு...! இனி பள்ளியிலே ஆதார் எண் பெறலாம்...! வெளியான புதிய அரசாணை...!

Tue Mar 12 , 2024
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் செய்து கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்விதுறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்; ஆதார் மையங்கள் உருவாக்குவது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவி […]

You May Like