பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் இருக்கின்ற அரிசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவு செய்து இருக்கிறது. ஏனென்றால் இடைத்தரகரங்களால் உண்டாகும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தான் இந்த எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த முடிவால் கர்நாடகா மாநிலம் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருக்கின்ற நிலையில், அதனை முடக்க இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த அறிவிப்பு காரணமாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வரும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மத்திய அரசிடம் ஆலோசனை செய்யாமல் மாநில அரசுகள் இலவச அரிசி திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசு இருப்புகளை வைத்துத்தான் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அத்துடன் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இயற்கை பேரிடரை சந்திக்கும் மாநிலங்களை தவிர்த்து, மற்ற மாநில அரசுகளுக்கு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் கோதுமை விற்பனை கிடையாது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது என கூறியிருக்கிறார்கள்.