fbpx

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை நிறுத்தம்..!! ஆனால், தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!!

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் கொள்முதல் குறைந்து விட்டதாலும், இருப்பு அளவுக்கு மீறி குறைந்துவிட்டதாலும், பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. எனவே, நுகர்வோர்களுக்கு எளிதாக பருப்பு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும், மாநிலங்களில் இருக்கும் பருப்புகளின் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கோதுமை தவிர திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், தொடர்ந்து அதிகரித்து வரும் கோதுமையின் விலையை குறைக்க அரசு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பயனில்லாமல் உள்ளது. எனவேதான், நிலைமையை கட்டுப்படுத்தவும், வரத்து அதிகரிக்கவும், இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளதாம். திடீரென அரிசி, பருப்பு விநியோகத்தினை மாநிலங்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகவும் பொதுமக்கள் மத்தியில் கலக்கம் சூழ்ந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், ரேஷன்தாரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா என்ற பீதியும் கிளம்பி உள்ளது.

ஆனால், மத்திய அரசு அறிவிப்பினால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள் அதிகாரிகள்.. தமிழகத்தில் மாதத்துக்கு 3.40 லட்சம் டன் அரிசி தேவையாக இருக்கிறது.. அதில், முன்னுரிமை தந்து, அந்தியோதயா பிரிவுகளுக்கு தேவைப்படும், 2 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு இலவசமாகவே வழங்கி வருகிறது. இதைத்தவிர, கிலோ அரிசி, 8.30 ரூபாய் விலையில், 93,000 டன் தரப்படுகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய அரசின் ஒப்பந்தத்தின் கீழ், நுகர்பொருள் வாணிப கழகமானது, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை, அரிசியாக மாற்றி, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டில் ஈடு செய்து வருகிறது.

அந்தவகையில், இந்த சீசனில் விவசாயிகளிடமிருந்து, 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. இப்போதைக்கு 7.50 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது.. இது வரும் ஆகஸ்ட் வரை போதுமானதாக உள்ளது.. அதனால், மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை நிறுத்தினாலும்கூட, தமிழக ரேஷன் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள்.. இந்த தகவலானது, ரேஷன் குடும்பதாரர்களுக்கு நிம்மதி பெருமூச்சை தந்துள்ளது.

Chella

Next Post

’உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா’..? கடலில் குதித்து வானிலை செய்தி வழங்கிய செய்தியாளர்..!!

Fri Jun 16 , 2023
கடலில் குதித்து வானிலை நிலவரத்தை வழங்கிய செய்தியாளர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறிய, ‘பிபர்ஜோய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் குஜராத் […]
’உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா’..? கடலில் குதித்து வானிலை செய்தி வழங்கிய செய்தியாளர்..!!

You May Like