fbpx

பணக்காரர்கள் பட்டியல்..!! முதலிடத்தை பிடித்திருப்பது யார் தெரியுமா..? அட இவரு மீண்டும் வந்துட்டாரா..?

பார்ச்சூன் இந்தியா 2023ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முதலிடத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 99.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இரண்டாம் இடத்தில் அதானி குழும நிறுவனங்களின் தலைவரான கவுதம் அதானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 63.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மூன்றாம் இடத்தில் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் மிஸ்திரி குடும்பம் உள்ளது. இவர்களது சொத்து மதிப்பு 34.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்களான பூனாவல்லா குடும்பம் உள்ளது. இவர்களுக்கு 32.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்கள் உள்ளது. மேலும், 5-வது இடத்தில் பங்குத் தரகரும், டி-மார்ட் வணிக நிறுவனத்தின் தலைவரான ராதாகிஷன் தமானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 23.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மேலும், ஷிவ் நாடார் குடும்பம், அசிம் பிரேம்ஜி, கோத்ரேஜ், பஜாஜ் மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனத்தை பிரித்து தனியாக பட்டியலிட்டுள்ளது ரிலையன்ஸ் குழுமம். இதன் மூலம் எதிர்காலத்தில் அதன் பங்குதாரர்களின் செல்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, ஆதானி குழும பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இந்த குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம், விளம்பரதாரர் மட்டத்தில் கடனை முன்கூட்டியே செலுத்த பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்றது. இந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து, அதானியின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகள் மீண்டு வந்துள்ளன. இருப்பினும் அவை கடந்தாண்டு செப்டம்பரில் எட்டிய உச்சத்தை விட கீழேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஒரு பிஸ்கட் மிஸ்ஸிங்..!! வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர பிரபல நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவு..!!

Wed Sep 6 , 2023
சென்னையில் பிஸ்கட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால், வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை எம்எம்டிஏ மாத்தூர் பகுதியைச் சேர்ந்த தில்லிபாபு என்பவர் தெருநாய்களுக்கு உணவளிக்க கடந்த 2021ஆம் ஆண்டு சில்லரை விற்பனை கடையில் ஐடிசி நிறுவனம் தயாரிக்கும் ‘சன்ஃபீஸ்ட் மேரி லைட்’ பிஸ்கட் 2 பாக்கெட்டுகள் வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டுகளுக்கு பதில் 15 மட்டுமே இருந்துள்ளது. இதுகுறித்து சில்லரைக் கடைக்காரரிடமும், […]

You May Like