fbpx

RIP | பெரும் சோகம்..!! பழம்பெரும் பிரபல நாடக, டிவி நடிகர் அடடே மனோகர் காலமானார்..!!

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார்.

சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர், பணிகளுக்கிடையே நாடகங்களிலும் நடித்து வந்தார். சுமார் 3,500-க்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் 6 நாடகங்களை இவரே எழுதி இயக்கி நடித்தார். நகைச்சுவை பாத்திரங்களை இவர் விரும்பி ஏற்று நடித்தார்.

மேடையிலேயே நேரடியாக பாடி நடிப்பதும் இவரது தனிச்சிறப்பு. வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும், நடித்தும் உள்ள இவர், கிட்டதட்ட 15 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ‘அடடே மனோகர்’ என்ற பெயரில் 1986 மற்றும் 1993ஆம் ஆண்டில் அப்போதைய டிடி தொலைக்காட்சியில் நாடகம் வெளியானது. இதைத் தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இவர் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று இரவு காலமானார். இதையடுத்து மனோர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

English Summary : TV actor Adade Manohar passed away

Read More : BJP | சர்ச்சைக்குள்ளான திமுகவின் ராக்கெட் விளம்பரம்..!! இதை நோட் பண்ணீங்களா..? கொந்தளிக்கும் பாஜக..!!

Chella

Next Post

BJP | 'நிறைய சிரமங்களுக்கு பிறகு பாஜக குடும்பத்தில் இணைந்துள்ளேன்'..!! விஜயதரணி பேச்சு..!!

Wed Feb 28 , 2024
“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் இல்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில் சேர்ந்தது குறித்து நெகிழ்ந்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி முதல்முறையாக பேசினார். அப்போது, “நமது நாட்டை பிரதமர் மோடி எவ்வாறாக மாற்றியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது […]

You May Like