fbpx

சென்னையில் மாஸ் காட்டிய ரிஷப் பந்த்!. தோனியின் சாதனையை சமன் செய்து அசத்தல்!.

Rishabh Pant: டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூலம், நீண்ட நாள்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிக்குத் திரும்பினார். கார் விபத்தில் சிக்கி குணமடைந்த பிறகு ரிஷப் பந்த் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் 39 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 109 ரன்களும் எடுத்து அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம், ரிஷப் பந்த் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் எம்.எஸ்.தோனியும், ரிஷப் பந்த்தும் இதுவரை 6 சதங்கள் விளாசியுள்ளனர். இந்தப் பட்டியலில் விருத்திமான் சஹா 3 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: 900 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்!. உளவுத்துறை உயர் எச்சரிக்கை!.

English Summary

Rishabh Pant Equals MS Dhoni’s Record with Stunning Century in Test Comeback

Kokila

Next Post

சென்னை உட்பட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்!. மத்திய அரசு!

Sun Sep 22 , 2024
New Chief Justices appointed for 8 High Courts including Chennai! Central government!

You May Like