fbpx

ரூ.22,842 கோடி வங்கி மோசடி… ஏ.பி.ஜி நிறுவனர் தலைவர் ரிஷி அகர்வால் கைது …

வங்கியில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக ஏ.பி.ஜி. நிறுவனத்தலைவர் ரிஷி அகர்வாலை சி.பி.ஐ. போலீஸ்  கைது செய்துள்ளது.

ஏபிஜி ஷிப்யார்ட் லிமிட்டெட் நிறுவனம் சூரத்தில் இயங்கி வருகின்றது. இதன் தலைவராக ரிஷி அகர்வால் செயல்பட்டு வருகின்றார். இந்த நிறுவனம் 28 வங்கிகளிடம்  ஐ.சி.ஐ.சிஐ. என்ற வங்கியின் மூலம் கடன் வாங்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியிலும் ரூ.2468 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

2012ம் ஆண்டு மற்றும் 2017ல் எர்ன்ஸ்ட் மற்றும் யங்க் என்ற தடயவியல் தணிக்கை அமைப்பு தணிக்கை செய்ததில் கடன் பெற்று திருப்பி செலுத்தாது மற்றும முறைகேடு செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. விதிகளை தவறாக பயன்படுத்தியது மற்றும் குற்றச்செயல்கள் , நம்பிக்கை மீறல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பிற வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நிதி குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தால் வேறு சில வழிகளில் மோசடி நடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடன் கணக்கு செயல்படாத சொத்து பட்டியலில் சேர்க்கப்பட்டு 2016ம் ஆண்டில் செயல்படாத சொத்து என அறிவிக்கப்பட்டு  2019ல் மோசடி நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றச்சதி, நம்பிக்கை மீறல், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஏமாற்றுதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களில் சேர்த்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டள்ளார்.

Next Post

இந்த விவசாயிகளுக்கு ரூ. 2000 ரூபாய் கிடைக்காது.. பட்டியலில் உங்கள் பெயரை எப்படி சரிபார்ப்பது..?

Thu Sep 22 , 2022
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் PM Kisan Samman Nidhi Yojana. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கணக்கில் 6,000 ரூபாய் நிதியுதவியை மோடி அரசு வழங்குகிறது. இந்த 6,000 ரூபாயை மொத்தம் 3 தவணைகளில் ரூ.2000 என விவசாயிகளின் கணக்கில் அரசு செலுத்துகிறது. இதுவரை இந்த திட்டத்தின் 11 தவணைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது மற்றும் […]

You May Like