fbpx

அதிக வாகன சத்தத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

வாகன சத்தத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் கார் சத்தம் ஒரு எரிச்சலூட்டும் என்று கருதுகின்றனர். ஹார்ன் சத்தமாக இருந்தாலும், பிரேக்குகள் சத்தமாக இருந்தாலும், இன்ஜின் சத்தமாக இருந்தாலும், கார் போன்ற மற்ற வாகனங்கள் சத்தம் தொல்லை தருவதாக அமைந்துள்ளது. இதனால் குறிப்பாக நெரிசலான நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடுமையான பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், சமீபத்திய ஆய்வின்படி, வாகன சத்தம் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. போக்குவரத்து சத்தத்தில் ஒவ்வொரு 10 டெசிபல் அதிகரிப்புக்கும், இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு ஆபத்து 3.2 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சத்தமில்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களின் மாரடைப்பு விகிதத்தையும் ஆய்வு ஒப்பிட்டுப் பார்த்தது. “சத்தம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு 100,000 மக்கள்தொகை உள்ள பகுதிகளில் 3,336 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. “அமைதியான சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கு 100,000 பேருக்கு 1,938 மாரடைப்புகள் வருகின்றன.

Vignesh

Next Post

குழந்தைகளுக்கு கண், புருவங்களில் மை வைக்கலாமா? என்ன பாதிப்புகள் ஏற்படும்..!

Tue Apr 30 , 2024
பிறந்த குழந்தைக்கு கண் மற்றும் புருவங்களில் மை வைப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகளும் விளைவுகளும் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். முன்பெல்லாம் பிறந்த குழந்தையை ஒரு புகைப்படம் கூட எடுக்க மாட்டார்கள். கண்திருஷ்டி பட்டுவிடும். இதனால் உடல்நலம் கூட பாதிக்கப்படலாம் என்று. இதனை எல்லாம் இந்த தலைமுறையினர் பின்பற்றுவதில்லை.பிரசவ அறையில் குழந்தை பிறப்பது முதல், வீட்டிற்கு மலர்தூவி வரவேற்பது வரை அனைத்தையும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் […]

You May Like