fbpx

இந்தியா முழுவதும் நிஃபா வைரஸ் பரவும் அபாயம்..!! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

நடப்பு ஆண்டில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பரவல் ஏற்பட்டது. இதனால், 6 பேருக்கு தொற்று பாதிப்பு காணப்பட்டது. அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டு வந்தது.

இதுபற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், பழ வவ்வால்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐ.சி.எம்.ஆர். ஆய்வு செய்ததில், வயநாடு மாவட்டத்தில் உள்ள வவ்வால்களில் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தி உள்ளது.

எனினும், இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் இந்த தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் எந்த பகுதியிலும் நிபா வைரஸ் தொற்று ஏற்படும். ஆனால், வயநாட்டில் உள்ள வவ்வால்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால், தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.

Chella

Next Post

அண்ணாமலையின் நண்பர் அமர்பிரசாத் ரெட்டியை மீண்டும் தூக்கியது காவல்துறை..!! இப்போ என்ன வழக்கு தெரியுமா..?

Thu Oct 26 , 2023
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன் பாஜக கொடிகம்பம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதனை போலீசார் அகற்றினர். அப்போது அங்கிருந்த பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை பாஜகவினர் அடித்து உடைத்தனர். இதில், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவரின் மண்டை உடைந்த நிலையில், பாஜகவினரை […]

You May Like