fbpx

Rituraj Singh | துணிவு திரைப்பட நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் (Rituraj Singh) காலமானார். அவருக்கு வயது 59.

Rituraj Singh | நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரித்துராஜ் சிங்கின் மறைவு சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். 40 முதல் 60 வயதுக்குள் நடிகர்கள், இயக்குநர்கள், காமெடியன்கள் என பலர் உயிரிழப்பது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி உயிரிழந்தது அஜித்தை மனவேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில், அஜித்துடன் இணைந்து நடித்த நடிகர் ரிதுராஜ் சிங் உயிரிழந்துள்ளார். இந்தி சீரியல்களில் பிரபலமானவர் ரித்துராஜ் சிங். பாலிவுட்டிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். 59 வயதான நடிகர் ரித்துராஜ் சிங் கணைய அழற்சி (Pancreatic disease) பாதிப்பு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சோஷியல் மீடியா மூலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

English Summary : Actor Rituraj Singh dies of cardiac arrest

Read More : https://1newsnation.com/afghanistan-terrible-landslide-more-than-20-houses-collapsed-and-25-people-died-rescue-operations-are-in-full-swing/

Chella

Next Post

"மட்டனுக்கு கலவரமா."? கறி சமைக்காத ஆத்திரத்தில் மகன் மனைவிக்கு அரிவாள் வெட்டு.! ஈரோடு அருகே பயங்கரம்.!

Tue Feb 20 , 2024
ஈரோடு அருகே மட்டன் சமைக்காத ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகனை வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாளி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி(50). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான கருப்பசாமி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து மனைவி மற்றும் மகன்கள் இடம் […]

You May Like