புதுவை மாநிலம் முதலியார் பேட்டை தொகுதி சுதான்னா நகர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவே இருசக்கர வாகனங்களில் செல்போன் மேடு பள்ளமான சாலையில் நிலை தடுமாறி விழுந்து அடிக்கடி காயம் அடைகிறார்கள். மழை காலங்களில் நீர் பள்ளத்தில் தேங்கி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள்.
அதிலும் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். அத்துடன் பேருந்து நிலையம் அருகே திறந்த நிலையில் சாக்கடை கால்வாய் இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் சாக்கடை கால்வாய் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து விடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே இந்த பகுதியில் சுமார் 3 வருடங்களாக சாலை வசதி இன்று பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆகவே இதனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் இந்த பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.