fbpx

கொள்ளை சம்பவம்..!! ரூ.1 லட்சம் சன்மானம்..!! என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை..!! பதிலுக்கு தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ‘முஷ்தஃபா காகா’ என்கிற கும்பலைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அர்ஷத் என்பவரும் அவருடைய கூட்டாளிகள் மஞ்சீத், சதீஷ் உள்பட மொத்தம் 4 பேரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த என்கவுண்டரில் 4 பேருமே காயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அனைவருமே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த அர்ஷத்தை பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், அவரை இன்று (ஜன. 21) பிடிக்க முற்பட்டபோது, போலீசாருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில், காவல்துறை ஆய்வாளர் சுனில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார். அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More : துணைத் தலைவர் பதவியை என் பொண்டாட்டிக்கு விட்டுத்தர மாட்டியா..? மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொலை..!! நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!

English Summary

Four members of the ‘Mustafa Kaka’ gang were shot dead in the gunfight.

Chella

Next Post

Gold Rate | இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு..? நகை வாங்கலாமா..? விலை நிலவரம் இதோ..!!

Tue Jan 21 , 2025
In Chennai today (January 21), the price of gold jewelry remained unchanged at Rs 7,450 per gram.

You May Like