fbpx

எங்கும் ரோபோ!… எதிலும் ரோபோ!… உலகின் முதல் AI மூலம் இயங்கும் DJ!… அமெரிக்கா வானொலி நிலையத்தில் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) அமெரிக்கா வானொலி நிலையம், உருவாக்கி உள்ளது.

வளர்ந்துவரும் நவீன காலகட்டத்திற்கேற்ப அனைத்து இடங்களிலும் மனிதர்களின் வேலைகளை குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ரோபோக்கள் இறங்கிவிட்டன. அந்தவகையில் தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. இதனால் பல துறைகளில் பலவித மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வானொலி நிலையம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) உருவாக்கி உள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆல்பா மீடியாவின் கேபிஎப்எப் லைவ் 95.5 FM ஆனது பியூட்டரி மீடியாவின் (Futuri Media) ரேடியோ ஜிபிடி (RadioGPT) மென்பொருளைப் பயன்படுத்தி இந்த டிஜேவை உருவாக்கியுள்ளது.

இது குறித்து கூறிய ஆல்பா மீடியாவின் நிர்வாக துணைத் தலைவர் (ஈவிபி) பில் பெக்கர், ரேடியோ GPT ஆனது அதிகமான நிகழ்வுகளில், உள்ளடக்கத்தை (Content Creators) உருவாக்குபவர்களை காட்சிப்படுத்தவும், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில், தகவல்களை தெரிவிக்கும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், பாடல்களை ஸ்ட்ரீமிங் செய்யும் தளமான ஸ்பாட்டிபை (Spotify UK) அயர்லாந்தில் உள்ள பிரீமியம் வாடிக்கையாளர்களுக்காக டிஜே எனப்படும் AI அம்சத்தை வெளியிட்டது. இந்த அம்சம் முதலில் பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பிரீமியம் சந்தாதாரர்களுக்குக் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்...? உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு...!

Thu Jun 22 , 2023
கல்லூரி முதலாம்‌ ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம்‌ தேதி வகுப்புகள்‌ துவங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள்‌ உள்ளது. இதற்கான மாணவர்கள்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள்‌ முதலாம்‌ ஆண்டில்‌ சேர்க்கப்பட்டுள்ளனர்‌. தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இனசுழற்சி முறையில்‌ மாணவர்‌ சேர்க்கை […]

You May Like