fbpx

“ஹர்திக் இதை செய்தால் தான் டீம்ல சேக்கனும்”..!! -பிசிசிஐக்கு உத்தரவுபோட்ட ரோஹித்

மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் மும்பை அணியில் இரு குழுக்களாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த பிரச்சினை டி20 உலகக் கோப்பை அணித் தேர்விலும் எதிரொலித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மே 26ஆம் தேதியுடன் ஐபிஎல் 17ஆவது சீசன் நிறைவுபெற்ற உடன், ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக இருக்க காரணமே அவர் அதிரடி பேட்டிங் செய்யும் வேகப் பந்துவீச்சாளர் என்பது தான். ஆல் – ரவுண்டர் என்ற அடையாளத்தின் காரணமாகவே ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் மும்பை அணியில் இரு குழுக்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை டி20 உலகக் கோப்பை அணித் தேர்விலும் எதிரொலித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வு மீட்டிங் இன்று மதியம் நடைபெற்றது. இதில், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், ஹர்திக்கை சேர்க்க, ரோஹித் புது உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால், இனி வரும் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை, மிகச்சிறப்பாக வீச வேண்டும். இல்லையென்றால் ஷிவம் துபேவை தான் உலக கோப்பைக்காக விளையாட அணியில் சேர்க்க வேண்டும் என ரோஹித் உத்தரவு போட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Post

நான் ஜெயிப்பதற்காக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளதா திமுக..? -சீமான் விமர்சனமும்.. அண்ணாமலையின் பதிலும்..

Tue Apr 16 , 2024
கோவையில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக சீமான் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுராங்கத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாஜகவை எதிர்க்கிறோம், மோடியை வரவிடக் கூடாது எனக் கூறிக்கொண்டு, கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை எனக் […]

You May Like