fbpx

இந்த முறை அதிரடி ஆட்டம்…! டி 20-யில் களமிறங்கும் ஒரு நட்சத்திர வீரர்கள்…!

வங்கதேசத்துக்கு எதிரான டி20-யில் பங்கேற்க இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மிர்புரில் இன்று, ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் 7 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

முதல் டெஸ்ட், சாட்டோகிராமில் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட், 22 முதல் 26 வரை மிர்புரில் நடக்கிறது. இத்தொடருக்காக வங்கதேசம் சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர், நேற்று முதற்கட்ட பயிற்சியை துவக்கினர். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முன்னிலையில் கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ‘டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த போட்டியில் தோல்வி அடைந்த பொழுது ஷிகர் தவான் இனி வரும் ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்று கொடுக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

மக்களே கவனம்...! தமிழக அரசு புதிய உத்தரவு...! ரேஷனில் ஆதார் எண் கட்டாயம் கிடையாது...!

Sun Dec 4 , 2022
குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசு விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக […]

You May Like