fbpx

தோனியின் சாதனையை முறியடித்த ரோகித் ஷர்மா!… அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பெருமை!

Rohit Sharma: ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அந்தவகையில் அயர்லாந்து அணி, 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். முகமது சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதில் பும்ரா மூன்று ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா ஒரு மெய்டன் ஓவர் வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் விராட் கோலி – கேப்டன் ரோகித் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 5 பந்துகள் எதிர்கொண்ட விராட் கோலி 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய ரோகித் ஷர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 12.2 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். மேலும், 3 சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக (600) சிக்சர்கள், குறைந்த பந்துகளில் 4000 ஓட்டங்கள் மற்றும் டி-20 உலகக் கோப்பையில் 1000 ஓட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 600 சிக்சர்களை அடித்துள்ளார். 9வது ஓவரை வீசிய ஜோஷ்வா லிட்டில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்தார். இது மட்டுமின்றி, இரண்டாவது சிக்ஸர் மூலம் டி20 உலகக் கோப்பையில் 1000 ஓட்டங்களைக் கடந்தார் ரோஹித் சர்மா.

இதேபோல், ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 55 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள ரோகித், 42 போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். இதன்மூலம் 72 போட்டிகளில் விளையாடி 41 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: இந்தியாவில் கடந்த ஆண்டை விட 8 சதவீதம் நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு…!

Kokila

Next Post

ஆரம்பமே அலரும் அதிகாரிகள்... 2023-ல் நடந்த சந்திரபாபு நாயுடு கைது.. சிஐடி கூடுதல் டிஜிபி அமெரிக்கா ஓட்டம்...!

Thu Jun 6 , 2024
CIT Additional DGP who arrested India Chandrababu Naidu flees to America overnight

You May Like