fbpx

ரோஜா செடி வளர வில்லையா? கவலை வேண்டாம்!! வீட்டிலேயே இயற்கை உரத்தை தயாரிக்கலாம்..!

கிராமங்களைத் தாண்டி நகரத்திலும் மரம், செடி, கொடி வளர்க்க ஆசைப்படுவோர் உண்டு. அதற்கு தேடி செடிகளை வாங்கி அதற்காக மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பவர்கள் இருக்கிறார்கள்.

செடியோ, மரமோ, கொடியோ வளர்வதற்கு தேவையானது காற்று, சூரியஒளி, தண்ணீர் இவை அனைத்தும் முக்கியம். மேலும் அதன் வளர்ச்சிக்கு உரங்களும் முதன்மையான ஒன்றாக விளங்குகின்றன. ஆனால், செயற்கை உரங்களை பயன்படுத்துவது என்பது கேடான ஒரு விஷயம். எனவே வீட்டிலேயே எப்படி இயற்கை உரத்தை தயாரிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1) வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள், மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் பச்சை கழிவுகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.

2) காய்கறி கழிவுகளைச் சேர்த்து வைத்து, அதன் மூலம் கிடைக்கும் உரத்தை இந்தச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள், மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் பச்சை கழிவுகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.

4) பலரும் வீடுகளில் ரோஜாச் செடி வளர்க்க ஆசைப்படுகின்றனர். ஆனால், நர்சரிகளில் உள்ளது போல, வீட்டில் உள்ள ரோஜாச் செடிகளில் பூ கொத்து கொத்தாக பூப்பதில்லை.

நுண்ணுயிர் பெருகினால்தான் தாவரம் வளரும்: ரோஜா செடிகள் வளர, முட்டை ஓடு, நண்டு ஓடு, மீன் முள், இறால் தோல், எலும்பு ஆகிய அனைத்தையும் காயவைத்து பொடி செய்து பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை ஆட்டுப் புழுக்கை அல்லது மண்புழு உரத்துடன் கலந்து செடிகளுக்கு கொடுத்தாலே போதும், ஒரு செடி முனையில் ஐந்துக்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும்.இது செய்ய முடியாதவர்கள் முட்டை ஓடு மட்டுமே கொடுத்தால் போதும். வெங்காயத்தோல், வாழைப்பழ தோல் ஆகியவையும் கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், எதையும் காய்ச்சி கொடுக்கக் கூடாது

Read More: பெற்றோர்களே உஷார்..!! மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பலி..!! குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை..!!

Baskar

Next Post

தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது? காரணங்களும்…விளக்கங்களும்..!!

Sun May 12 , 2024
பொதுவாக தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோல தங்க கொலுசும் அணியக்கூடாது என்று சொல்வார்கள். இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் ஒளிந்திருக்கின்றன. தங்கத்தை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்வார்கள். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கா என்று சொல்வார்கள். மேலும் கல்யாணம் ஆகி பெண் வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வது வழக்கம். ஏனென்றால், […]

You May Like