fbpx

தனியாக வந்த ரவுடி..!! சுத்து போட்ட கும்பல்..!! பயங்கர ஆயுதங்களால் தலையை துண்டித்த கொடூரம்..!!

சேலத்தில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்த் (44). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, ரவுடி ஆனந்த் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு உறவினர் வீட்டுக்கு ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தை வழிமறித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், அவர்கள் ஆனந்தை சுத்துப் போட்டு சரமாரியாக வெட்டி, தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனியாக வந்த ரவுடி..!! சுத்து போட்ட கும்பல்..!! பயங்கர ஆயுதங்களால் தலையை துண்டித்த கொடூரம்..!!

இதையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணிஅயில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே, கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஏரிக்கரையில் சிறுமியை வழிமறித்த இளைஞர்..!! ஒரே அலறம் சத்தம்..!! 3 கிமீ தூரம் வரை பரபர சம்பவம்..!!

Mon Feb 6 , 2023
13 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட  இளைஞரை 3 கிலோ மீட்டார் தூரம் பைக்கில் சிறுமியின் உறவினர்கள் விரட்டினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பள்ளமுள்ளு வாடி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, பேனா வாங்குவதற்கு ஏரிக்கரையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், விலாசம் கேட்பது போல நடித்து சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் […]

You May Like