கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல்
சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
சனாதன குறித்து உதயநிதியின் கருத்துக்கு பாஜக உள்பட பலர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ. 10 கோடி பரிசு என அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளார்.அமைச்சர் உதயநிதி படத்தை வாளால் வெட்டியும் தீ வைத்து எரித்தும் சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
திமுக-விற்கு இது போன்ற மிரட்டல்கள் வருவது ஒன்றும் புதிதல்ல, கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என ராமர் பால சர்ச்சையில் கேள்வி எழுப்பினார். அப்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது. அப்போது ராம்விலாஸ் வேதாந்தி எனும் வடமாநில சாமியார் கலைஞர் கருணாநிதி தலையை சீவுவேன் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.