fbpx

ரூ.1000 உரிமைத்தொகை..!! பெண்களுக்கு வயது நிர்ணயம்..!! வழிகாட்டு நெறிமுறைகள்..!! அரசாணை..!!

மகளிர் உரிமைத்தொகை பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது திட்டமிட்டபடி திட்டத்தை தொடங்குதல், திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குதல், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டு வருமானத்தை கணக்கீடு செய்து குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளன. ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மகளிர் உரிமை தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது. அதற்காக உரிமைத்தொகை பெறும் மகளிரின் ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னர் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

மக்களே..!! ’இந்த எந்த ஆவணங்களையும் மாற்ற முடியாது’..!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி..!!

Tue Jun 27 , 2023
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை. மேலும், போலிப் பத்திரப்பதிவும் ஒழிந்திருக்கிறது. போலி பத்திரப்பதிவு […]

You May Like