fbpx

ரூ.1,000 உரிமைத்தொகை..!! களத்தில் இறங்கிய அண்ணாமலை..!! ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. மேலும், இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் செப்.21ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்திருந்தது.

உரிமைத் தொகைத் திட்டத்தில் 56.5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கக்கோரி விழுப்புரத்தில் அக்டோபர் 18அஅம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Chella

Next Post

’LEO படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க’..!! ’செம ட்ரீட் இருக்கு’..!! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ்..!!

Sat Oct 14 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஒரு […]

You May Like