fbpx

ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களே இப்போ ஹேப்பியா..? வெளியான செம குட் நியூஸ்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 இந்த மாதம் 10ஆம் தேதி தகுதியானவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.

இத்திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ஆம் தேதியே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை நவ.12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி செலவுகளைச் சமாளிக்கும் வகையில், முன்கூட்டியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் குடும்பத் தலைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 10ஆம் தகுதியானவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

எடப்பாடி தொடர்ந்த வழக்கு..!! ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிரடி தடை..!! ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Tue Nov 7 , 2023
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘அதிமுக பொதுச்செயலாளராக என்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என […]

You May Like