fbpx

ரூ.1,000 உரிமைத்தொகை..!! தவறான தகவல் கொடுத்தால் சட்ட நடவடிக்கை..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்குமே கிடைத்துவிடாது. தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். ’இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போது மக்களிடம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஏற்கனவே பெறப்பட்ட படிவங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இத்திட்டத்தின் கீழ் பணம் பெறுவது தொடர்பாக பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. அதாவது, இந்த முகாம்களை தவறவிட்டால் என்ன செய்வது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலர் தாரேஷ் அகமது, தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “2 கட்ட முகாம்களையும் தவறவிட்டவர்கள் ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல, விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் கள ஆய்வும் நடத்தப்படும். ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு தர வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் போலியானதாக இருக்கும்பட்சத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டால் விண்ணப்பதாரர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’கெத்து காட்டும் ரஷ்யா’..!! ’ஐந்தே நாட்கள் தானாம்’..!! சந்திரயானுக்கு முன் நிலவில் தரையிறங்கும் லூனா - 25..!!

Fri Aug 11 , 2023
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தற்போது நிலவை நோக்கி சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இது ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்தது கிடையாது. […]

You May Like