fbpx

மேல்முறையீடு செய்தவர்களுக்கு இன்று முதல் ரூ.1,000 உரிமைத்தொகை..!! உங்களுக்கு மெசேஜ் வந்துருச்சா..?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வரை முதல் முறை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி வருவதால், 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமை தொகை, இம்மாதம் முன்கூட்டியே நாளை (நவம்பர் 10) வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மேல்முறையீடு செய்த பல்வேறு மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவர்தான்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

Thu Nov 9 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதுவும் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அவரின் எவிக்‌ஷனுக்கு பின் இந்த வாரம் கேப்டனான மாயா, போட்டியாளர்களை அணி திரட்டி சண்டை போட்டு வருகிறார். குறிப்பாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் […]

You May Like