கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து நாளை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதில், சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு பின்னர் 44 செ.மீ. மழை பதிவானது. இதில் பல வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தன.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி போன்ற வட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக தமிழக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனவே குடும்ப அட்டைதாரர்கள் நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம். சீர்காழி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை மாவட்டங்களில்உ ள்ள அட்டைதாரர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்து என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.