பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடலோர பகுதி மீனவர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி, பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொதை வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு நூறு மீனவ இளைஞர்களை இந்திய கப்பற்படையில் சேர்ப்பது எங்கள் இலக்கு எனவும் தெரிவித்தார்.
மேலும், இரவு நேர சோதனையில் இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை என்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நவீன கருவி வழங்கப்படுகிறது. இயந்திரத்தில் தவறு இருந்தால், புதிய இயந்திரம் மாற்றப்படும் எனவும் கூறினார்.