18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திமுகவின் நட்சத்திர பேச்சாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலை திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் இன்று ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த திட்டத்தில் உள்ள சின்ன சின்ன குறைபாடுகளை நீக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் மகளிர் உரிமைத்தொகை வாங்காத பெண்களுக்கும் ரூ. 1000 வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார்.