fbpx

கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.10000 ஓய்வூதியம்… அசோக் சிகாமணி அறிவிப்பு

ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று புதிதாக தலைவராக பொறுப்பேற்றுள்ள அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த அசோக் சிகாமணி கூறுகையில், ’’ ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்கள் பயன் பெறும் வகையில் மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். ராஞ்சி கோப்பை போட்டிகளை நடத்த நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா என்பவர் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் தலைவர் பதவி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. துணைத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி இருந்து வந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் சிகாமணி, பிரபு ஆகியோர் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார். இதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிராமணர்கள் மட்டுமே கோலோச்சிய இடத்தில் இந்த முறை பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தலைவராகி உள்ளார். தமிழக மற்றும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகள் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் சீனிவாசன். பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியதால் அவர்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Post

உலகத்தில் மிக உயரமான பெண் முதல் முதலில் விமானத்தில் பயணம் !!

Sat Nov 5 , 2022
மிக உயரமான பெண் என கின்னசில் சாதனை படைத்த பெண் முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். உலகத்திலேயே மிக உயரமான பெண் 7 அடி உயரத்தில் உள்ளார். ருமேஸ்யா கெல்கி என்ற பெண் துருக்கியின் விமான நிலையத்தில் இருந்து 13 மணி நேரம் பயணம் செய்துள்ளார். 25 வயதே நிரம்பிய அந்த இளம் பெண் வீவர் சின்ட்ரோம் என்ற நோய் உள்ளது. அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் இந்த அரிய […]

You May Like