fbpx

ரூ.15 லட்சம் மோசடி..!! மகாலட்சுமி கணவர் ரவீந்தர் மீது விஜய் பரபரப்பு புகார்..!! நடந்தது என்ன..?

தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரவீந்தர் மீது போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர், கடந்தாண்டு மே 8ஆம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் எனக் கூறி 20 லட்சம் ரூபாய் பணத்தினை கேட்டுள்ளார். இதற்கு அந்தக் குறித்த நபரான விஜய் “என்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் தான் இருக்கிறது. அதை தான் இரண்டு தவணையாக அனுப்புவதாக கூறியிருக்கிறார். பின்னர் முதலில் 10 லட்சமும், அடுத்த நாள் 5 லட்சமுமாக மொத்தம் 15 லட்சத்தை ரவீந்தரினுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறாக விஜய்யிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர், பணத்தை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், குறித்த தவணைக்குள் ரவீந்தரால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு, வங்கி விடுமுறை என்றும், செக் அனுப்பிருக்கேன் என்றும் பல்வேறு விதமான காரணங்களை சொல்லி அமெரிக்க நபர் விஜய்யின் செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதன் பின்னர் விஜய்யின் மனைவி, ரவீந்திரனை தொடர்பு தமக்கு தரவேண்டிய பணத்தை கேட்டபோது, அவரை தகாதவார்த்தையால் பேசி இருக்கிறார். 

இதன் காரணமாக கோபமுற்ற விஜய் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், மற்றும் அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை வைத்து சென்னை கமிஷனருக்கு புகார் ஒன்றினை அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக ரவீந்தர் கூறுகையில், தான் விஜய்யிடம் இருந்து 15 லட்சம் வாங்கியது உண்மை தான் என்றும், ஆனால் இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவருவதற்கு முடியாமல் தான் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும், விஜய்யின் உறவினர்கள் வந்தால் தான் செக்கை கொடுத்துவிடுவேன் என்றும் பதிலளித்துள்ளார்.

Chella

Next Post

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பயணி செய்த செயல்…..! அடச்சீ முகம் சுழித்த சக பயணிகள் இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…..?

Tue Jun 27 , 2023
கடந்த 24 ஆம் தேதி ஏர் இந்தியாவின் AIC 866 விமானம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்றது. இந்த விமானத்தில் ராம் சிங் என்ற பயணியும் சென்றுள்ளார் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் சமையல்காரர் ஆக இவர் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் அந்த ஏர் இந்தியா விமானத்தின் 17F இருக்கையில் அமர்ந்து சென்ற நிலையில், விமானம் நடுவானில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைகள் இருக்கும் […]
மத்திய அரசின் திடீர் முடிவால் விமான கட்டணம் உயரும் அபாயம்..! பயணிகள் கவலை..!

You May Like