fbpx

பிரதமர் சொன்ன ரூ.15 லட்சம்..!! ஆதாரம் இருந்தால் ரூ.1 லட்சத்து 200 ரூபாய் பரிசு..!! போஸ்டர் ஒட்டிய பாஜக..!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக  வாக்குறுதி கொடுத்த ஆதாரத்தை தந்தால், அவர்களுக்கு 1 லட்சத்து 200 ரூபாய் வழங்கப்படும் என பாஜக போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து மீட்டால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடலாம்.. அந்த அளவுக்கு வெளிநாட்டில் கருப்பு பணம் உள்ளது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதனை திரித்து ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் ரூபாய் மோடி தருவதாக வாக்குறுதி அளித்ததாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பாஜக-வினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி ரூ.15 லட்சம் அனைவரது வங்கி கணக்கிலும் போடுவதாக வாக்குறுதி கொடுத்தார் என்பதற்கான ஆதாரத்தை அளித்தால் 1 லட்சத்து 200 ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாஜக-வினர் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மகள்..!! தனியாக இருந்த 80 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த 21 வயது இளைஞர்..!!

Fri Jul 14 , 2023
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. இவருக்கு 80 வயது ஆகிறது. இவர் தனது மூத்த மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக மகள் சென்றிருந்த நிலையில், மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை கஞ்சா போதையில் இருந்த எதிர் வீட்டை சேர்ந்த குகன் (21) நோட்டமிட்டுள்ளார். […]

You May Like