fbpx

ரூ.2,000 கோடியா..? அதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா..!! ரூ.200 கோடியை தாண்டுவதே கஷ்டம் தான்..!! கங்குவா வசூல் நிலவரம்..!!

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சூர்யாவின் கேரியரில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 3டி தொழில் நுட்பத்திலும் உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவா திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.40 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.13 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்திய அளவில் இப்படம் ரூ.26 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளன.

இதன் மூலம் சூர்யாவின் கேரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்னும் சிறப்பை கங்குவா அடைந்துள்ளது. இருப்பினும், கங்குவா படத்துக்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இன்று இப்படத்தின் வசூல் பெரியளவில் குறைந்துள்ளது. இந்த படம் உலகளவில் ரூ.2,000 கோடி வசூல் செய்யும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாக ரூ.200 கோடி வசூல் செய்யுமா? என்பதே சந்தேகம் தான்.

Read More : ரூ.400 கோடி ஊழல்..!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த அதிமுக..!! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!!

English Summary

Kanguva is said to have collected Rs 40 crore worldwide on its first day.

Chella

Next Post

இந்த பாஸ்வேர்டு வச்சிருந்தா உடனே மாத்துங்க.. நொடியில் ஹேக் செய்யப்படும்..!! - எச்சரிக்கை

Fri Nov 15 , 2024
This is the most commonly used password in India, and it can be cracked in less than a second

You May Like