fbpx

பொங்கலுக்கு ரூ.2,000..? தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் ஜனவரி மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1,000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு திடீர் முட்டுக்கட்டை போட்டது.

இதனையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வருகிற 16ஆம் தேதி டோக்கன் வழங்கி 10 நாட்களில் இந்த பணத்தை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள். ரேஷன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமாக இல்லையென புகார் வந்ததை அடுத்து இந்தாண்டு (2023) ரூ.1,000 ரொக்க பணம் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. எனவே, 2024ஆம் ஆண்டும் பரிசு பொருட்கள் இல்லாமல் பணமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகைக்கான பொருட்கள் இதுவரை கொள்முதல் செய்யப்படாத நிலையில், ரொக்கப் பணம் வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், 1,000 ரூபாயை அதிகரித்து வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, 2.19 கோடி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே இவற்றை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பொங்கல் பரிசுத்தொகை அதிகரித்து வழங்க இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

Chella

Next Post

அமேசானில் ரூ.19,000-க்கு ஹெட்ஃபோன் ஆர்டர்..!! ஆனால், வந்தது என்ன தெரியுமா..? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..!!

Tue Dec 12 , 2023
நம்மில் பலர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இதன் மூலம் நாம் வீட்டை விட்டு வெளியேறாமல் நமக்கு தேவையானதை ஆர்டர் செய்து, ஆஃபர் என்ற பெயரில் மலிவாக பெற்றுக் கொள்கிறோம். எந்த அளவிற்கு ஆன்லைன் ஷாப்பிங் நமக்கு உதவியானதாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில குறைபாடுகளை இருக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் மூலம் செய்யப்படும் ஆர்டர்கள் தாமதாகவும், சிலது தவறாக அல்லது உடைந்து வருவதாக கூறி […]

You May Like