fbpx

கழிவு நீர் கால்வாயில் மிதந்த ரூ.2000 நோட்டுகள்!… கட்டுக்கட்டாக அள்ளிச்செல்லும் மக்கள்!… வைரலாகும் வீடியோ!

பீகார் மாநிலத்தில் கழிவு நீர் கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்த ரூ.2000 நோட்டுகளை மக்கள் அள்ளிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகியுள்ளது.

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட பல்வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றார்கள்.

காலையிலேயே வாய்க்காலில் ரூபாய் ந ட்டுகள் அடங்கிய பைகள் காணப்பட்டன. உடனடியாக இந்த தகவல் மக்களுக்கு தெரியவர கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு சென்று பணத்தை அள்ள தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ரூபாய் நோட்டுகள் உண்மையான ரூபாய் நோட்டாக என்றும், அதனுடைய நம்பகத்தன்மையை கண்டறியவும், அவற்றை வாய்க்காலில் வீசியவர்கள் யார் என்பதைக் கண்டறியவும் அதிகாரிகள் இப்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

Kokila

Next Post

என்வழி எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் வழிதான்!... குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஓபன் டாக்!

Mon May 8 , 2023
வீரர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்கான சிறந்த சூழலை அணியில் உருவாக்கி, அந்த வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்பட செய்வது, சென்னை அணியின் வழி என்று குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக பங்கேற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு, முதல் ஆண்டே சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். […]
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனாகிறார் ஹர்த்திக் பாண்ட்யா..?

You May Like