fbpx

ரூ.2000 நோட்டுகள் செல்லுமா செல்லாதா… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு..!

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது.

இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30, வரை, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துளளது.

2018-2019 ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாகவும், தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுககள் செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

மிரட்டலான லுக்கில் என்.டி.ஆர்... வெளியானது "தேவாரா" FIRST LOOK போஸ்டர்...

Fri May 19 , 2023
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு உலகளவில் மிகவும் பிரபலமானவர் ஜூனியர் என்டிஆர். இவரின் அடுத்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் சிவா கொரட்டாலா இயக்கிவரும் இந்த படம், பான்-இந்திய படமாக உருவாக்கப்பட்டுவருகிறது. தற்காலிகமாக என்.டி.ஆர் 30 பெயரடிப்பட்டுள்ள இந்த படத்திற்க்கு “தேவாரா”என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று என்டிஆரின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, டைட்டிலுடன் பயங்கரமான ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கருப்பு உடையில் ஒரு மூர்க்கமான […]

You May Like