fbpx

பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படும்!… தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்!

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

ரெடி...! இன்று முதல் 27-ம் தேதி வரை மட்டுமே...! துணைத்தேர்வுக்கு மறக்காம விண்ணப்பிக்கவும்...!

Tue May 23 , 2023
10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு இன்று முதல்‌ 27-ம்‌ தேதி வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை […]

You May Like