விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
PM-KISAN திட்டத்தின் படி அரசு வழங்கும் ரூ.6,000 நிதியுதவியானது, இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் 4 மாதங்களுக்கு ஒருமுறை, தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் 12-வது தவணை நிதிக்காக ஆவலுடன் காத்திருக்கும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 11-வது தவணையை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில், 12-வது தவணை நிதியானது தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்னதாக வரும் அக்டோபர் 17ஆம் தேதி 12-வது தவணை நிதி விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
eKYC கட்டாயம்…
PM-KISAN திட்டத்தின் மூலம் பயன்பெற பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் eKYC ப்ராசஸ் முடித்த விவசாயிகள் மட்டுமே திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் என்று அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஏற்கனவே eKYC காலக்கெடுவை மே 31 முதல் ஜூலை 31 வரை நீடித்தது, பின்னரும் ஒருமாதம் வரை அவகாசம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.