fbpx

4 நாட்களில் ரூ.2,720..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) சற்று குறைந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் அதிரடியாகக் குறைந்தது. கடந்த 4 நாட்களில் (திங்கள் – வியாழன்) மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

4 நாட்களுக்குப் பிறகு நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை கடந்த சில நாட்கள் குறைந்த நிலையில், நேற்றும் இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும், வெள்ளி ஒரு கிலோ ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : 10ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

English Summary

As of today (Saturday) morning, it is selling at Rs 55,480, down by Rs 80 per sawan.

Chella

Next Post

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு...! தமிழக அரசு அரசாணை..!

Sat Nov 16 , 2024
New guidelines for obtaining a legal Heir certificate

You May Like