fbpx

’ரூ.400 கோடி அநியாயமா போச்சே’..!! புலம்பும் வங்கி ஊழியர்கள்..!! நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வங்கியில் இருந்த ரூ.400 கோடி ரொக்க பணம் தண்ணீரில் மூழ்கி சேதமானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாக்பூர் நகரமே வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், அலுவலகங்களில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நாக்பூரின் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி இந்த வெள்ளப்பெருக்கால் கடுமையாக சேதமடைந்தன. தொலை தொடர்பு வயர்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் மற்றும் ரொக்க கையிருப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.400 கோடி தண்ணீரில் மூழ்கி வீணானது.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து சேதமடைந்த நோட்டுகளை ஸ்கேன் செய்து கணக்கில் எடுத்துக்கொண்டனர். பின்னர் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்று ரூபாய் நோட்டுகளை வழங்கினர். மேலும், வெள்ளத்தால் ரூபாய் நோட்டுகள் சேதமானால் அந்த பணத்துக்கான இழப்பை வங்கி நிர்வாகம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’அவரை நியமித்தது செல்லாது.. நான் தான் மதுரை ஆதீனம்’..!! பரபரப்பை கிளப்பிய நித்தியானந்தா..!! ஐகோர்ட் கிளையில் வழக்கு..!!

Wed Nov 1 , 2023
மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தானே அடுத்த மதுரை ஆதீனம் எனவும் கூறி, நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் நித்தியானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில், அவர் கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக அவரே கூறியிருந்தார். அங்கிருந்து வீடியோ மூலம் சொற்பொழிவு ஆற்றி வந்தார். இந்நிலையில், நானே மதுரை ஆதீனம் என நித்தியானந்தா சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் […]

You May Like