மூத்த குடிமக்கள் அனைவரும் ஆயுஷ்மான் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரம்பை அதிகப்படுத்தியுள்ளது. 4.5 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுகாதாரம் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்துள்ளது.
குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் தரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குகிறது. இதற்கு ஆதார் கார்ட் மட்டும் இருந்தால் போதுமானது. NHA இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பித்துக் கொள்ள முடியும். 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்து அடையாள அட்டை பெற்று கொள்ளலாம்.
அதேபோல், தனியார் காப்பீடு அல்லது வேறு ஏதேனும் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்து இருந்தாலும், மூத்த குடிமக்கள் இந்த AB PM-JAY திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும்.. வருமானங்களை கணக்கில் கொள்ளாமல் 70 வயதை தாண்டிய அனைவருமே இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.