பொது இடங்களில் மாஸ்க் அணியாத்வர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.. எனவே கொரொனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது..
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, பொது இடங்களில் மாஸ்க் அணியாத்வர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பின் விதியின்படி, தனியார் நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றாகப் பயணிப்பவர்களுக்கு அபராதம் பொருந்தாது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக 2,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.. மேலும் கொரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் 17.83 சதவீதமாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர்.. கிட்டத்தட்ட 180 நாட்களில் பதிவான மிக அதிக பலி எண்ணிக்கை இதுவாகும்.