fbpx

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், ரூ.5000 அபராதம்.. ரயில்வே போலீசார் எச்சரிக்கை..

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்..

ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணியர், பட்டாசுகளை எடுத்துச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.. இதை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் பேசிய போது “ ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்துவருகிறது. இந்த விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.முதன்முறையாக பிடிப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.

தொடர்ந்து, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கவுள்ள நிலையில், அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், ‘மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்யப்படும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

கண் பார்வையை மேம்படுத்த வேண்டுமா..? அப்ப உடனே இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க...

Sat Sep 24 , 2022
இன்றைய காலகட்டத்தில் கண்பார்வை குறைபாடு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இப்போதெல்லாம், அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் மணிநேரம் செலவிடுவது கண்களை மோசமாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்களை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம், அதனால் கண் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. கேரட், முட்டை, கீரைகள், காய்கறிகளை சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். இந்த பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் […]

You May Like