fbpx

பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000 உதவித் தொகை..! விண்ணப்பிப்பது எப்படி..! முழு விவரம்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் சேர விரும்பும் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்பது, பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் 1992ம் ஆண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் பல வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, சமுதாயத்தில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் உணர்வோடும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்திட வேண்டும் என்பது தான். இதனிடையே கல்வியில் பெண்களின் நிலையினை உயர்த்திடும் வகையில் 2001ம் ஆண்டு மறு வடிவாக்கம் செய்யப்பட்டுள்ள பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் ஆரம்ப கல்வி மற்றும் சிறு குடும்ப முறையினை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்த திட்டத்தின் படி ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பிறப்பு சான்று, பெற்றோரின் வயது சான்று, பிறப்பு சான்று அரசு மருத்துவரின் சான்று , குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை), வருமான சான்று ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, இருப்பிட சான்று போன்றவற்றை பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2வது பெண் குழந்தையின் 3 வயதுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பம் செய்வது எப்படி: பொதுவாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 2-வது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தி அடையும் முன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். முதல் பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

50000 உதவித் தொகை: ஒரு பெண் குழந்தையுடன் கணவரோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரத்திற்கான டெபாசிட் பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. முதலில் பெண் குழந்தை பிறந்து 2-வது பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் 3 குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்திற்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவு பெற்ற பின்னர் டெபாசிட் செய்த பத்திரங்களுடன் சென்று உடன் முதிர்வு தொகையை அந்த குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும்.

Read More: ரேஷன் கார்டு இருந்தால் போதும் ரூ. 10 லட்சம் வரை கடன்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!!

English Summary

Rs.50,000 assistance given by the government to girl children..! How to apply..! Full Details…

Kathir

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே..!! செப்-30 ஆம் தேதிக்குள் இதை செய்யுங்க.. இல்லைனா சிக்கல் தான்!!

Tue Jul 9 , 2024
It is mandatory for all ration card holders to complete e-KYC verification. The central government has warned that the ration cards of those who do not complete the verification by September 30 will be deleted.

You May Like